கல்வி

ஓ. லட்சுமி ப்ரத்யுஷா( O. LAKSHMI PRATHYUSHA)/ INN/Chennai, @Infodeaofficial 

லகத்திற்கு ஆன்மீகமும் நாகரீகமும் கலந்த கல்வியை வழங்கியது நம் பாரததேசம். அரசனுக்கு அவன் நாட்டில் மட்டுமே சிறப்பு, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப கல்வியின் சிறப்பை உணர்ந்து தரமான கல்வியை ஒரு காலத்தில் வழங்கியது நம்நாடு.
நாம் ஏன் கல்வி கற்றல் வேண்டும்? “விலங்கோடு மக்கள் அனையர் – இலங்கு நூல் கற்றாரோ டேனை யவர் – என்கிறார் திருவள்ளுவர்.”
இதன் பொருள் – விலங்கோடு நோக்கின் மக்கள் எவ்வளவு மேன்மை உடையவரோ அவ்வளவு தாழ்ந்தவர் கற்றாரோடு நோக்கின் கல்லாதவர். எனவே தான் எல்லோரும் கல்வி கற்பது அவசியம்.
5000 வருடங்களுக்கு முன்பே நம் நாட்டின் வரலாறு தொடங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் வாழ்ந்த காலத்தில் சூத்தர் என்ற மகரிஷி நைமி சாரண்யத்திலுள்ள பல்கலை கழகத்தில்
துணை வேந்தராக இருந்தார். இவர் தகவல் பரிமாற்றத்துறையில் சிறந்து இருந்தார். இன்று நாம் செய்யும் பூஜைகளும், நோன்புகளும் இவர் கூறிதான் செய்கிறோம் என நாரதர் கூறியதாக
வரலாற்றுச் செய்தி கூறுகிறது. 
இக்காலத்தில் மகாராஜாவாக இருந்த கிருஷ்ணனுக்கும் பாதி
வயிற்றால் காலம் கழித்த சுதாமனுக்கும் ஒரே தரமான கல்வி வழங்கப்பட்டது. ஆனால், இன்றோ தரம் என்பது வெறும் ஊழல் தரத்தை குறிப்பிடுகிறது. பணக்காரன், ஏழை, அரசு, தனியார் என
பற்பலருக்கும் பிரித்து அவர் அவருக்கு இதுதான் என கல்வி நிறுவனங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படவில்லை என தனியார் பள்ளியில் சேர்க்க சென்றால் அங்கோ கல்விக்கு விலை அதிகம். இதற்குக் காரணம் தனியார் பள்ளிகளில் ஆசிரியருக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதுதான் என்று நினைத்தால் அது தவறு. அரசு ஆசிரியர்களைவிட தனியார் பள்ளியின் ஆசிரியர்களுக்கு மிக குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் பன்மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தினர் இதனால் ஏழை மாணவர்கள் பள்ளியில்
சேர்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. எனவே அரசு தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தின்மீது சட்டப்படி ஒரு வரையறை அமைத்து அதனை பின்பற்ற வலியுறுத்தல்
வேண்டும். மேலும், கட்டாய நன்கொடையை குற்றமாக அறிவிக்க வேண்டும்.
கிருஷ்ணன் காலத்திற்கு பிறகு நம் நாட்டில் மூன்று முக்கியமான பல்கலைகழகங்கள் தோன்றின. காஷ்மீர் தேசத்தில் தக்ஷஷீலா என்ற பல்கலைகழகம் இருந்தது. இந்த பல்கலை கழகத்தின் புத்தகங்கள, தேவையான பொருட்கள் பல அப்போது நடந்த முஸ்லீம் போராட்டத்தில் சிதைந்து போயின.
நாளந்தா என்ற ஒரு பல்கலைகழகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு 10,000 பேராசிரியர்கள் இருந்தனர். இங்கு விச்வம் {பொது நிர்வாகம் – PUBLIC ADMINISTRATION}, பிராம்மணம் அதாவது வேதம் மற்றும் இராணுவம் இப்படியாக பற்பல கல்வியும் 64 கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியர் வீதம் அம்மாணவர்களின் மேம்பாட்டிற்கு முழுமையாக ஒரு ஆசிரியர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார். இக்காலத்தில் பல
தனியார் பள்ளிகளில்; இதனையே பின்பற்றி பதிவுகளைப் பெறுக்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை. ஆந்திராவில் நாகார்சூனா என்ற பல்கலைகழகத்தில் 60,000 மாணவர்களும், 6000
ஆசிரியர்களும் இருந்தனர். இங்கு கல்விக்கு பாகுபாடு இல்லை. ஏனெனில் மக்களைத் தம் பிள்ளைகளாக மதித்த அரசர்களும் ஆசிரியர்களும் இருந்தனர்.
மன்னர் ஆட்சியில் கல்வியில் சமத்துவம் இருந்தாலும் சிலர் மட்டுமே கல்வி வாய்ப்புக்களுக்கு நெருங்கி இருந்தார்கள். இதனால் மற்றவர்களுக்கு கல்வி எட்டாக் கனி ஆனது. போஜராஜ் என்ற மன்னன் இந்நிலையை மாற்ற அன்று 10 இலட்சமாக இருந்த மக்கள் தொகையில் ஆண்டு தோறும் 1 இலட்சம் பேருக்கு தரமான கல்வி வழங்கியதாக செய்தி.
பின்னர் வந்தது அந்நியர் ஆட்சி. 200 வருடங்களாக நம்மை அடிமையாக்கி ஆண்டனர் ஆங்கிலேயர். இவர்கள் காலத்தில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி வெறும் எழுத்தர் பதவிக்கு
மட்டுமே போதுமானதாக இருந்தது. அக்கல்வியும் ஏழை மக்களுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு சத்தியயுகம், மன்னர்யுகம், வணிகர்யுகம் என்ற மூன்று யுகங்களிலும் கல்வி எவ்வாறு இருந்தது என்று அறிந்தோம். பின் தற்போதைய மக்கள் ஆட்சியில் கல்வி எவ்வாறு இருந்தது என ஆராய்வோம். மக்கள் ஆட்சியில் கல்வி அனைவருக்கும் வழங்க அரசு கட்டாய கல்வி திட்டத்தை இயக்கியது. 
மேலும், மத்திய உணவு திட்டத்தால் பல மாணவர்கள் ஈர்க்கப்பட்டார்கள். இவையெல்லாம் நடைபெற்று இருந்தாலும் கல்வியின் தரம் மிக அடித்தளத்தலத்தில் தான் இன்றும்
இருக்கிறது. இதனால், பலர் தனியார் கல்வி நிறுவனத்தில் தம் குழந்தைகளை கடன் வாங்கியாவது சேர்க்க எண்ணினர். 
ஆனால் இன்றைய கல்வி முன்புபோல் நமக்கு ஆன்மீகம், பொருளாதாரம், சமூகம், உலகநீதி ஆகியவற்றை கற்றுக் கொடுக்கவில்லை. வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே
இன்றைய கல்வி பயன்படுகிறது. நமது கல்வியில் அறநெறிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். மேலும், அரசு ஐந்தாண்டு திட்டம் வகுத்து அனைத்து தரப்பினருக்கும் சமமான தாராள
கல்வி வழங்குவதற்கு அமல்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: